மஞ்சள் பை இயக்கம்: பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து மஞ்சள் பை பயன்படுத்தும் இயக்கம், நெல்லை குறுக்குத்துறை கல்மண்டபங்களில் இன்று துவங்கியது. நெல்லை சிவராம் கலைக்கூட மாணவ, மாணவியர்களுடன் இணைந்து நம் முத்தமிழ் பப்ளிக் பள்ளியின் மாணவர்களும் மஞ்சள் பைகளில் ஓவியங்களைத் தீட்டினார்கள். தூய பொருநை, நம் நெல்லைக்குப்பெருமை என்ற வாசகங்களை எழுதி பொதுமக்களுக்கு மஞ்சள் பைகளை இலவசமாக வழங்கினார்கள். சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு, நெல்லை பாராளுமன்ற உறுப்பினர், நெல்லை மேயர் மற்றும் பாளை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் அவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.