உலக புத்தக தினத்தை முன்னிட்டு முத்தமிழ் பப்ளிக் பள்ளியில் புத்தக தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் எழுத்தாளர் திரு. நாறும்பூநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று விழாவை சிறப்புச் செய்தார். இவ்விழாவில் நடனம், சிறப்புரை போன்றவை மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது. மேலும் மாணவர்களின் பேச்சுத்திறனை வளர்க்கும் விதமாக புத்தக வாசிப்பு என்பது படித்து இன்புறுவதற்கே. அறிவைப் பெருக்குவதற்கே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நிகழ்த்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர் அவர்கள் நடுவராகப் பங்கேற்று புத்தக வாசிப்பு என்பது அறிவைப் பெருக்குவதற்கே என்று தீர்ப்பு வழங்கி விழாவினை இனிதே நிறைவு செய்தார்.